அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 'ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி' உறுப்பினர் பதவி விலகல்!
Reha
3 years ago

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அஸீஸ் நிஸாருத்தீன் விலகியுள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேகாலை மாவட்டத்தின் றம்புக்கன பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் உள்ளிட்ட மேலும் சில விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அஸீஸ் நிஸாருத்தீன் தெரிவித்தார்.



