உலக வங்கியின் முக்கியஸ்தரை சந்தித்த நிதி அமைச்சர்!
Mayoorikka
3 years ago

நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபரை (Hartwig Schafer) ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி, நாட்டின் இயல்பு நிலைமை மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு போஷாக்கு, கல்வி, சுகாதாரம் மற்றும் மருந்துகளை வழங்குவதற்கு உலக வங்கி உறுதிகொண்டுள்ளதாக Hartwig Schafer மேலும் தெரிவித்துள்ளார்.



