ரம்புக்கனை சம்பவத்தை ஆராய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழு நியமனம்!
Mayoorikka
3 years ago

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் ஆராய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் 20 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்குவதாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மூவர் கொண்ட விசேட குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



