ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு அஜித் ரோஹன விடுத்துள்ள அறிவிப்பு
#SriLanka
#Protest
#Ajith Rohana
Prasu
3 years ago

எரிபொருளை எடுத்துச்செல்லும் பவுசர்களுக்கு இடையூறு செய்வதை அல்லது அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவிக்கையில், எரிபொருள் விநியோகத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்காக அதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் எரிபொருளை எடுத்து செல்லும் பவுசர்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



