ஜனாதிபதி பதவியில் இருந்து விலக தயார் என அறிவித்த கோட்டாபய!

Nila
3 years ago
ஜனாதிபதி பதவியில் இருந்து விலக தயார் என அறிவித்த கோட்டாபய!

அனைத்து கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தால் பதவி விலக தயார் என ஜனாதிபதி சபாநாயகருக்கு தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் தன்னை பதவி விலகுமாறு கோரினால் அதற்குத் தயார் என சபாநாயகரிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார் என நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 

அனைத்துக் கட்சித் தலைவர்களும் தன்னை பதவி விலகுமாறு கோரினால் அதற்குத் தயார் என சபாநாயகரிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே சஜித் இன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் சென்று ஜனாதிபதி பதவி வேண்டும் என கூறினால் தான் பதவி விலக தயார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கட்சி கூட்டத்தின் போது சபாநாயகர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார். இதனை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

எதிர்கட்சியை சேர்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்த இந்த விடயத்தை கூற தயாராக இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!