இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு இடையூறு ஏற்படாது - ஜனாதிபதி கோட்டாபய
#SriLanka
#Gotabaya Rajapaksa
#Protest
Prasu
3 years ago

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ரம்புக்கனை சம்பவம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை பொலிஸ் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
குறித்த துயரச் சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து பொதுமக்களும் வன்முறையை தவிர்க்குமாறு ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் மேலும் கோரியுள்ளார்.



