தங்காலை, தம்புள்ளை உட்பட பல நகரங்களில் வீதியை முடக்கி பாரிய ஆர்ப்பாட்டங்கள்

Mayoorikka
3 years ago
தங்காலை, தம்புள்ளை உட்பட பல நகரங்களில் வீதியை முடக்கி பாரிய ஆர்ப்பாட்டங்கள்

தம்புள்ளை நகர மையத்தில் ஏ-9 பிரதான வீதி மற்றும் ஏ-6 பிரதான வீதியின் போக்குவரத்தை முற்றாக தடைசெய்து தம்புள்ளை முச்சக்கர வண்டிகள் சங்கம் மற்றும் பல சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று காலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் அத்தியாவசிய எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் ரம்புக்கனையில் பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர்.

இதேவேளை, தங்காலை நகர மையத்திலும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கேகாலை - அவிசாவளை வீதியை மறித்து போராட்டம் நடத்தப்படுவதுடன், காலி நகரின் மையப்பகுதியில் இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக, காலி நகரை கடந்து செல்லும் பல வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!