இலங்கையில் தொடரும் நெருக்கடி மட்டக்களப்பை சேர்ந்த மூவர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்!
Nila
3 years ago

இலங்கை – மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் இன்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையுல் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகம் நோக்கி இலங்கையர்கள் படையெடுக்கின்றனர்.
இந்த வகையில், இன்று அதிகாலையும் மூவர் தமிழகம் தனுஸ்கோடி ஊடாக சென்றடைந்துள்ளனர்.
குறித்த மூவரையும் மீட்ட பொலிஸார் தனுஷ்கோடி மெரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிய வருகின்றது.



