அரசாங்கத்திற்கு எதிராக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!
Prabha Praneetha
3 years ago

திருகோணமலை மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் ஒன்று கூடிய மீனவர்கள் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தினை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியான எரிபொருள் விலையேற்றம் காரணமாக தாம் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக குறித்த மீனவர்கள் இந்த அரசு பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன் பிடிக்க செல்வதற்கு எரிபொருள் தட்டுப்பாடாக உள்ளதாக தெரிவித்த அதே வேளை பிடித்துவரும் மீன்களை சந்தைப்படுத்துவதிலும் சிக்கல் நிலை நிலவிவருவதன் காரணமாக தாம் தமது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.



