ரம்புக்கணை சம்பவம் குறித்து ஐநா கவலை
Mayoorikka
3 years ago

ரம்புக்கணை சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் கவலை வெளியிட்டுள்ளார்
அவர் தெரிவித்துள்ளதாவது
ரம்புக்கணையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்து ஆழ்ந்த கவலையடைந்திருக்கின்றேன்.
எந்த தரப்பினதும் வன்முறையும் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களின் உரிமைகளிற்கு இடையூறுவிளைவிக்கும்.
பொதுமக்களையும் அவர்களிற்கு தங்கள் அடிப்படை சுதந்திரங்களை பயன்படுத்துவதற்கு உள்ள உரிமையையும் பாதுகாப்பதற்கு பலத்தை பயன்படுத்துவதை ஆகக்குறைந்தளவிற்கு தேவையானதாக மட்டுப்படுத்துவது அவசியம்.



