ரம்புக்கனை கலவரம் : 33 பேரில் மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!!

Prabha Praneetha
3 years ago
ரம்புக்கனை கலவரம் : 33 பேரில் மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!!

ரம்புக்கனை பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் காயமடைந்த 33 பேர் தொடர்ந்து கேகாலை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

13 பொதுமக்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர்களில் மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய அமைதியின்மையில் 20 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனையில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில் மறு அறிவித்தல்வரை அப்பகுதி முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!