உக்ரைன் போர் பல மாதங்கள் நீடிக்கும் யுத்தமாக உருவெடுக்கும் - பிரிட்டன் பாதுகாப்பு அறிக்கை

#Russia #Ukraine #War
Prasu
3 years ago
உக்ரைன் போர் பல மாதங்கள் நீடிக்கும் யுத்தமாக உருவெடுக்கும் - பிரிட்டன் பாதுகாப்பு அறிக்கை

உக்ரைனில் அடுத்த கட்டமாக, பல மாதங்கள் நீடிக்கும் போராக உருவாகும் வாய்ப்புள்ளது என பிரிட்டன்  பாதுகாப்பு அதிகாரிகள் கணித்துள்ளனர்.

பிரிட்டனின் மூத்த தேசிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று அந்நாட்டின் அமைச்சரவையில் விளக்கம் அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், “கடுமையான உக்ரேனிய எதிர்ப்பிற்கு எதிராக ரஷியாவின் அதிக எண்ணிக்கையிலான படைகள் சொந்தமாக தீர்க்கமான முடிவுகளை எடுக்க வாய்ப்பில்லை.

வடக்கு உக்ரைனில் ஏற்பட்ட முந்தைய பின்னடைவுகளில் இருந்து ரஷியா இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. ரஷிய ராணுவத்தினர் பிரிந்து சண்டையிடுகின்றனர். சில வீரர்கள் மற்றும் பிரிவுகள் சண்டையிட மறுக்கின்றன.உக்ரைனில் அடுத்த கட்டமாக, பல மாதங்கள் நீடிக்கும் போராக உருவாகும் வாய்ப்புள்ளது” என்றார்.

இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சன் சமீபத்தில் தான் உக்ரைனுக்கு சென்று வந்தார். இன்று அவருடைய செய்தித்தொடர்பாளர் அமைச்சரவையில் பிரதமர் பேசியதை கூறினார். 

அதில் பிரதமர் போரிஸ் ஜாண்சன்  கூறியதாவது “உக்ரைனின் நிலை ஆபத்தானது. ஏனெனில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ரஷிய படைகளின் தோல்விகளால் கோபத்தில் உள்ளார். ஆனால் அவர் மனித உயிர்கள் பலியாவதை பொருட்படுத்தாமல், ஒருவிதத்தில் வெற்றியை பெறுவதில் உறுதியாக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

இதன் மூலம், விரைவில் முடிவுக்கு வரும் என்று நினைத்து கொண்டிருந்த உக்ரைன் போர், ரஷியா வெற்றி பெறும் வரை தொடரும் என்ற நிலை உள்ளது என்பது பிரிட்டன் அதிகாரிகளின் கருத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!