ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பலியானவர் பற்றி வெளியான முக்கிய தகவல்
#SriLanka
#United National Party
Prasu
3 years ago

ரம்புக்கனை பகுதியில் இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நபர் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.
கொல்லப்பட்டவரின் குடும்பத்தவர்களையும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் பார்ப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ருவான் விஜயவர்த்தன சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதை கண்டித்துள்ள ஐக்கியதேசிய கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்தியாவசியப்பொருட்கள் தங்களிற்கு கிடைக்கவேண்டும் என்றே வேண்டுகோள் விடுத்தார்கள் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய பலத்தை பிரயோகிக்கவேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளது.



