ரம்புக்கணை பதற்றம் : :வெளிப்படையான விசாரணைகள் வேண்டும்: அமெரிக்க தூதுவர்
Mayoorikka
3 years ago
ரம்புக்கணையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் வௌிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung அழைப்பு விடுத்துள்ளார்.
ரம்புக்கணையில் இருந்து வெளியாகும் செய்தியால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதுவர், அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் இதனை தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.