ரம்புக்கனை சம்பவத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகள் வெட்கத்திற்கு உரியது - மஹேல விமர்சனம்
#SriLanka
#Mahela Jayawardene
Prasu
3 years ago

ரம்புக்கனை சம்பவத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகள் வெட்கத்திற்கு உரியது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன விமர்சித்துள்ளார்.
தமது டுவிற்றர் பக்கத்தில் மஹேல ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறையாக செயற்ப்பட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் பொதுமக்களை கைது செய்யாமல் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதுதான் ஜனநாயகமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



