இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு! இதோ புதிய கட்டண விபரம்
Prathees
3 years ago

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிப்படுவதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண திருத்தத்தின் பிரகாரம் சாதாரண சேவை பேருந்தின் குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாவாகவும், அதிகபட்ச கட்டணம் 2,022 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய கட்டண திருத்தத்தின் படி, அரை சொகுசு பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 33 ரூபாவாகவும், அதிகபட்ச கட்டணம் 2,528 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய பஸ் கட்டண திருத்தத்தின்படி சொகுசு பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாவாகவும், அதிகபட்ச கட்டணம் 3370 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



