ஆளும் தரப்பின் பிரதான அமைப்பாளராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமனம்!
Mayoorikka
3 years ago

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் தரப்பின் பிரதான அமைப்பாளராக (பிரதான கொறடா) நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய அமைச்சர்கள் 17 பேர் பதவியேற்ற நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்க பதவியேற்றிருந்தார்.
இதற்கு முன்னர், பிரதான அமைப்பாளராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதவி வகித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



