3D புரொஜெக்ஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்
Prabha Praneetha
3 years ago

கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் பத்தாவது நாளாகவும் தொடர்கிறது.
நேற்று இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலக கட்டிடத்தை வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்யும் வகையில் 3D புரொஜெக்ஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நேற்றிரவு டிஜிட்டல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒளி சமிக்ஞைகள் மூலம் அரசுக்கு எதிரான கோஷங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.



