இலங்கையில் மீண்டும் அதிகரித்த பெற்றோல் - டீசல் விலைகள்!

Nila
3 years ago
இலங்கையில் மீண்டும் அதிகரித்த பெற்றோல் - டீசல் விலைகள்!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையினை மீண்டும் அதிகரித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல், அனைத்து வகையான பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 35 ரூபாவினாலும், டீசல் லீட்டர் ஒன்றின் விலையினை 75 ரூபாவினாலும் அந்த நிறுவனம் அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 338 ரூபாவுக்கும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 367 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

அதேநேரம், ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 289 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 327 ரூபாவுக்கும், பிரிமியம் 295 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி காரணமாக இவ்வாறு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!