காலி முகத்திடல் போராட்டத்தை தடுக்க சட்ட நடவடிக்கை!

Nila
3 years ago
காலி முகத்திடல் போராட்டத்தை தடுக்க சட்ட நடவடிக்கை!

காலி முகத்திடலில் தொடர்ந்து 10வது நாளாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.இந்த நிலையில் அதனை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தயாராகியுள்ளது.
 
அதற்கமைய, ஜனாதிபதி செயலகத்திற்கான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தடை உத்தரவு பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
இந்த தடை உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொள்ள கோட்டை பொலிஸார் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த தடை உத்தரவு கோரிக்கையின் ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் பாதையில் உள்ள தடைகள் நீங்கும் என நம்புவதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!