காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் தீப்பந்த போராட்டம்!

#SriLanka #Protest #Jaffna
Reha
3 years ago
காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் தீப்பந்த போராட்டம்!

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப் பாலத்தில் இருந்து பண்ணை சுற்றுவட்டம் வரை பேரணியாக சென்றது.

இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!