எக்ஸ்இ கிருமி கூடியவிரையில் மலேசியாவில் பரவக்கூடும் - மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை
Prasu
3 years ago

புதிய வகை ஓமிக்ரான் எக்ஸ்இ கிருமி கூடியவிரையில் மலேசியாவில் பரவக்கூடும் என அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தடுப்பூசிப் போட்டுக்கொள்ளாதவர்களிடையே அந்தக் கிருமி கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் குறிப்பிட்டனர்.
தற்போது பரவிவரும் ஓமிக்ரான் கிருமி, கண்டுபிடிக்கப்பட்ட ஒருசில மாதங்களுக்குள் மலேசியாவில் பரவத் தொடங்கியது. அப்போது அதன் எல்லைகள் திறக்கப்படவில்லை.
இப்போது எல்லைகள் திறக்கப்பட்ட நிலையில் புதிய வகை கிருமி மலேசியாவுக்குள் இன்னும் விரைவாக நுழையும் என்று நம்பப்படுகிறது.
ஓமிக்ரான் எக்ஸ்இ கிருமி முதலில் பிரிட்டனில் இவ்வாண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற வகை கிருமிகளைவிட அது 10 விழுக்காடு அதிகமாகப் பரவக்கூடியது.



