சிங்கப்பூர் மலேசியா எல்லைகளில் அதிகம் வர்த்தகமாகும் மின் சிகரெட்
#drugs
Prasu
3 years ago

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் ‘வேப்’ என்றழைக்கப்படும் மின்-சிகரெட்டுகளின் வர்த்தகம் ஜோகூர் பாருவில் சூடுபிடித்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் பாரு செல்லும் பல சிங்கப்பூரர்கள் முதலில் பெட்ரோல் நிலையத்துக்கும் அதையடுத்து மின்-சிகரெட் விற்கப்படும் கடைகளுக்கும் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இம்மாதம் 15ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் சிங்கப்பூரர்கள் சிலர் இவ்வாறு மின்-சிகரெட் வாங்குவதைக் காணமுடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டு மின்-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.



