நடுக்கடலில் மிதந்த 59 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா பொதி
#SriLanka
#drugs
Prasu
3 years ago

சுமார் 59 மில்லியன் ரூபா பெறுமதியான 197 கிலோ 67 கிராம் கஞ்சா கடந்த 16ஆம் திகதி இரவு மன்னார் கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்தது.
இலங்கை கடற்படையின் மிஹிகத என்ற கப்பலானது மன்னார் தெற்கு கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்த இரண்டு சாக்கு மூட்டைகளை கடற்படை அதிகாரிகள் கண்டுபிடித்து அதில் 50 கேரள கஞ்சா பொதிகளை கண்டெடுத்துள்ளனர்.
கேரளாவுக்கு கஞ்சாவை கொண்டு சென்றது யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை எதிர்வரும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.



