கடல் பகுதியில் ஏவுகணை பரிசோதனை நடத்திய வடகொரியா

#NorthKorea #Missile
Prasu
3 years ago
கடல் பகுதியில் ஏவுகணை பரிசோதனை நடத்திய வடகொரியா

வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம் ஜாங் உன். உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார்.

ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது.

இந்நிலையில், ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. இதனை தென்கொரியாவின் பாதுகாப்பு படை பிரிவு இன்று காலை தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் ஹேம்ஹங் பகுதியில் வைத்து பரிசோதனை செய்யப்பட்ட இந்த இரு ஏவுகணைகளும் 110 கிலோமீட்டர் தொலைவைச் சென்று தாக்கியுள்ளது.  அதிக அளவாக 25 கி.மீ. உயரத்திற்கு பறந்து சென்றுள்ளன என தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!