சரண் அடையாவிட்டால் அழிவு நிச்சயம் : உக்ரைன் வீரர்களுக்கு ரஷியா எச்சரிக்கை

#Ukraine #Russia #War
Prasu
3 years ago
சரண் அடையாவிட்டால் அழிவு நிச்சயம் : உக்ரைன் வீரர்களுக்கு ரஷியா எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 50 நாட்களை கடந்து நீண்டு கொண்டிருக்கிறது. மிகப்பெரிய படை பலம் கொண்ட ரஷியா போரை தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே உக்ரைனை தன்வசமாக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உக்ரைன் வீரர்களின் பதில் தாக்குதல்களால் ரஷிய படைகள் முன்னேற முடியாமல் திணறி வருகின்றன.

எனினும், கடந்த சில நாட்களாக தீவிர தாக்குதலை ரஷிய படைகள் நடத்தி வருகின்றன.  துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றும் நடவடிக்கையில் ரஷிய படைகள் இறங்கியது. அந்நகருக்குள் நுழைந்த ரஷிய படைகள் முன்னேறி சென்றன. அங்கு சில நாட்களாக கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.

 மரியுபோல் நகரை சுற்றிவளைத்துள்ள ரஷிய படைகள், உக்ரைன் படை வீரர்கள் சரண் அடைய வேண்டும் இல்லாவிடில் அழித்துவிடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.  

மரியுபோலில் உள்ள மிகப்பெரிய அசோவ்ஸ்டல் எஃகு ஆலையை  உக்ரைன் வீரர்களுக்கு சரண் அடைவதற்காக  1 மணி வரை ஒப்படைப்பதாக கூறியுள்ள ரஷிய பாதுகாப்பு அமைச்சகம், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடையும் வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதாக தெரிவித்துள்ளது. 

அதேவேளையில், சரண் அடையக் கூடாது என்று உக்ரைன் வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவ தளபதி உத்தரவிட்டுள்ளதாக  ரஷிய படைகளுக்கு ரகசிய தகவல்  கிடைத்து இருப்பதாகவும் ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!