உகண்டா செரினிட்டி குழுமத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியீடு
Mayoorikka
3 years ago

உகண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்கள் மீது இலங்கையில் தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
உகாண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக பல பேஸ்புக் பதிவுகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு வெளியான பேஸ்புக் பதிவுகளின் குற்றச்சாட்டுகளை செரினிட்டி நிறுவனம் குறித்த அறிக்கையில் மறுத்துள்ளது.



