மன்னார் தெற்கு கடலில் 177 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு
Nila
3 years ago

மன்னார் தெற்கு கடலில் 177 கிலோ 60 கிராம் கேரள கஞ்சாப் போதைப் பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த போதைப் பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.
இதன்போது சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாப் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் தொடர்ந்து முன்னெடுத்துவரும் சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் காரணமாக குறித்த போதைப் பொருள் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த கேரள கஞ்சாப் போதைப் பொருளை தீவைத்து அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.
மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின பெறுமதி சுமார் 6 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.



