வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கால்வாயில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்: இருவர் பலி

Prathees
3 years ago
வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கால்வாயில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்: இருவர் பலி

மோட்டார் சைக்கிள் வேமதில்ல நீர்த்தேக்கத்தின் வான் கால்வாயில்  வீழ்ந்ததில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

தம்புள்ளை - வேமதில்ல பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

4 நண்பர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் கலேவெல, புவக்பிட்டிய, நபடகஹாவத்த பகுதியைச் சேர்ந்த பிசுல் ஹபீக் ஹம்னிதாஸ் (வயது 16) மற்றும் நவ்சாத் அலி முசாபிக் (வயது 16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இருவர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!