ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியேறி.. ஜனாதிபதி மாளிகைக்கு..

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக ஜனாதிபதி தனது கடமைகளை கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு மாற்றியுள்ளார்.
ஜனாதிபதி தனது கடமைகளை ஜனாதிபதி மாளிகையில் இருந்து தற்காலிகமாக செய்கிறார்.
இதேவேளை ஜனாதிபதி செயலகத்திற்கு தேவையான பணியாளர்கள் குழுவொன்றும் அதற்கு அழைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி கலந்துரையாடல் நடத்துகிறார்.
தற்போதைய பிரச்சினைகள் தொடர்பான பல சுற்று கலந்துரையாடல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (16) இடம்பெற்றது.
நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியேர். கலந்து கொண்டனர்
நிதி, எரிசக்தி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.



