ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குப் பதிலாக இலங்கையை வாங்குமாறு எலான் மஸ்கிடம் கோரிக்கை!

Nila
3 years ago
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குப் பதிலாக  இலங்கையை வாங்குமாறு எலான் மஸ்கிடம் கோரிக்கை!

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குப் பதிலாக இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள் என எலான் மஸ்கிடம் ட்விட்டர் பயனாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக ட்விட்டர், எலான் மஸ்கிற்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. 

இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்த நிலையில் ட்விட்டர் பயனாளர்கள் சிலர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குப் பதில் பொருளாதார பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

எதையாவது வாங்க வேண்டும் என நினைத்தால் ட்விட்டரை விட்டு விடுங்கள்,  41 பில்லியன் டாலருக்கு இலங்கையை வாங்கிகொள்ளுங்கள். உங்களது டெஸ்லாவுக்கு இங்கு சிறந்த கிராஃபைட் கிடைக்கும் என தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!