காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு நாட்டை ஒப்படைப்பதற்கான பொறிமுறை என்ன?

Prathees
3 years ago
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு நாட்டை ஒப்படைப்பதற்கான பொறிமுறை என்ன?

அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தமது வேலைத்திட்டம் மற்றும் மாற்று யோசனைகளை முன்வைப்பதற்கு அரசாங்கம் நியாயமான கால அவகாசம் வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரை அவர்கள் எந்த வேலைத்திட்டம் அல்லது பொறிமுறை குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் 225 பேரும் வேண்டாம் என்று சொல்லும் இந்த போராட்டக்காரர்களுக்கு அந்த பொறிமுறை வேண்டாம்  என்றால் நாடு என்ன பொறிமுறையை இயக்குகிறது என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

காலி முகத்திடலில் இருப்பதாக கூறப்படும் படித்தவர்கள் மற்றும் புத்திசாலிகள் அவர்களின் முன்மொழிவின்படி நாட்டை ஒப்படைக்கவும் அவ்வாறு கையளிப்பதற்கான பொறிமுறையை தெளிவுபடுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருக்கும் ஆட்சியாளர்களைக் கொன்றோஇ விரட்டியோ வெற்றி பெற்ற நாடுகள் இல்லை. உலக வரலாற்றில் இத்தகைய அரசுகளின் தலைவிதியை ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் சமீபத்திய வரலாற்றில் காணலாம் என்றும் அவர் மேலும்  கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!