இலங்கையில் இருந்து சிறப்பு விமானத்தில் தப்பியோடிய பசில் ராஜபக்ஷ...?

Nila
3 years ago
இலங்கையில் இருந்து சிறப்பு விமானத்தில் தப்பியோடிய  பசில் ராஜபக்ஷ...?

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாக தென்னிலங்கை இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷ கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இரத்மலானை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த N 750 GF தனியார் ஜெட் விமானத்திலேயே அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
காலை 10.40 மணிக்கு பசில் சென்ற விமானம் டுபாய்க்குப் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தற்போது இலங்கையில் இருந்து டுபாய்க்கு விமானங்கள் இல்லாத காலம் இது என்று விமானிகள் கூறுகின்றனர்.
 
தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக பொய்யை பரப்பிய பசில் லங்கா மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்தார் எனவும் தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!