எனது சிறிய மகள் சாப்பிடுவதில்லை.. வீட்டின் முன் போராட்டம் நடத்த வேண்டாம்: ஊடகவியலாளர் சந்திப்பில் சாந்த பண்டார கதறல்
Prathees
3 years ago

தனது சிறிய மகள் சாப்பிடாத காரணத்தினால், தனது வீட்டின் முன் போராட்டம் நடத்த வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த கேடுகெட்ட அரசியலுக்கு முடிவு கட்டும் வகையில் தனது அரசியல் செயற்பாடுகளை மேலும் வீரியத்துடன் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாந்த பண்டாரவை இராஜாங்க அமைச்சராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தம்பதெனியவில் உள்ள சாந்த பண்டாரவின் வீட்டுக்கு முன்பாக பிரதேச மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



