பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 35 பேர் உயிரிழப்பு - 71 பேர் படுகாயம்
#Accident
#Death
Prasu
3 years ago

தென்கிழக்கு ஜிம்பாப்வேயின் சிமானிமானி கிராமத்தில் நேற்று இரவு பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறைந்தது 71 பேர் காயமடைந்தனர்.
பிரபல சியோன் கிறிஸ்டியன் தேவாலயத்தைச் சேர்ந்த பயணிகள், ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, பேருந்து நெடுஞ்சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் விழுந்ததாக ஜிம்பாப்வே போலீசார் தெரிவித்தனர். பேருந்தில் 106 பேர் பயணம் செய்துள்ளர். இந்த எண்ணிக்கை விதிமுறைகளுக்கு மேல் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜிம்பாப்வேயில் சமீபத்திய ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, ஆனால் அதற்கான சாலை பராமரிப்பு பணிகள் எதுவும் இல்லை என்று ஐநா அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



