நவீன தொலைத்தொடர்பு வசதிகளுடன் எழுச்சிபெறும் காலிமுகத்திடல்
Nila
3 years ago

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஆர்ப்பாட்டம் இரவு பகல் பாராது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இதேவேளை ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதி ஆர்ப்பாட்டக்காரர்களால் கோட்டா கோ கம என்றவாறாக பெயர் இடப்பட்டு பெயர்ப்பலகை நடப்பட்டுள்ளது.
அதேநேரம் கோட்டா கோ கம பகுதியில் வைத்தியசேவைகள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களாலும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆர்ப்பாட்ட களத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகின்றது.
இவ்வாறான நிலையில் கோட்டா கோ கமவில் தொலைபேசி சேவையினை விரிவுபடுத்தும் நோக்கோடு முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய தொலைத்தொடர்பு கம்பங்களை அமைத்து வருகின்றது.



