லிட்ரோ நிறுவனத் தலைவர் பதவி விலகல்.. எரிவாயு நெருக்கடிக்கு பசில் ராஜபக்சவே காரணம் என கடிதம்
Prathees
3 years ago

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அரசாங்க அதிகாரிகள் குழு வேண்டுமென்றே எரிவாயு நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள நீண்ட கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது கொள்கையின் அடிப்படையில் ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



