சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட 135 எரிபொருள் விற்பனையாளர்கள் கைது
#Fuel
#Arrest
Prasu
3 years ago

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட 135 எரிபொருள் விற்பனையாளர்கள் இதுவரை சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்காக நேற்றும் 67 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
5,690 லீற்றர் பெற்றோல், 10,115 லீற்றர் டீசல் மற்றும் 5,620 லீற்றர் மண்ணெண்ணெயுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.



