இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அபராதம் செலுத்தியதன் காரணம் என்ன?

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டன் நகரின் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போரிஸ் ஜான்சனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
இதற்கிடையே, கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி பிரதமர் போரிஸ் ஜான்சன், நிதி மந்திரி ரிஷி சுனக் ஆகியோருக்கு லண்டன் போலீசார் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், மது விருந்தில் பங்கேற்றதற்காக போலிசார் விதித்த அபராதத்தைச் செலுத்திவிட்டேன். விதிகளை மீறி மதுவிருந்தில் கலந்து கொண்டதற்காக மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.



