உலக வங்கியிடமிருந்து அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்ய 10 மில்லியன் டொலர் நிதியுதவி!
Nila
3 years ago

இலங்கைக்கு மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய 10 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார்.
ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டிற்கு தேவையான மருந்து வகைகளை உடனடியாக கொள்வனவு செய்வதற்கு விரைவில் 10 மில்லியன் டொலரை வழங்கவுள்ளதாக உலக வங்கி இணங்கியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அதேபோன்று, தனது அமெரிக்க விஜயத்தின் போது உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கு பொறுப்பான பிரதி தலைவரை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 400 முதல் 500 மில்லியன் டொலர் வரையான உதவி கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்



