எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்த நபர் கைது
Prathees
3 years ago

வத்தளை - ஹெந்தலவத்தை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த மற்றுமொரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 30 லீட்டருக்கும் அதிகமான பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது.
அண்மையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யும் 68 இடங்களைக் கண்டறிய பொலிஸா நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதன்போது, 8,025 லீட்டர் பெற்றோலும் 726 லீட்டர் டீசலும் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கலன்களுக்கு எரிபொருளை வழங்குமாறு கோரி, விவசாயிகள் குழுவொன்று தம்புள்ளையில் இன்று (12) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



