சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் நிலை - ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை!

#SriLanka #rice #Lanka4
Reha
3 years ago
சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் நிலை - ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை!

எரிபொருள் மற்றும் உர பிரச்சினை காரணமாக சிறுபோகத்தில் நெல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது சந்தையில், நாட்டரிசி ஒருகிலோகிராம் 210 முதல் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அதேநேரம், ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 230 ரூபாவுக்கும், கீரி சம்பா ஒரு கிலோகிராம் 270 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

எரிபொருள் பிரச்சினையால், சிறுபோகத்தில் திட்டமிட்டவாறு பயிர்செய்கையினை மேற்கொள்ள முடியாவிட்டால், எதிர்வரும் காலப்பகுதியில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!