குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க கூடாது : சங்கக்கார சாடல்

Prabha Praneetha
3 years ago
குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க கூடாது : சங்கக்கார சாடல்

குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டு மக்களுக்கு உடனடி தீர்வுகள் அவசியம் என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்

சமூக வலைதளத்தில் இடம்பெற்ற நேர்காணலில் பேசிய சங்கக்கார, 21 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை வெறும் 226 பேர் மட்டுமே அழித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

நாம் அனைவரும் தேர்ந்தெடுத்த தலைவர்கள் மோசமான கொள்கைகளை வைத்துள்ளதாகவும் மோசமான நிதி நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதைவிட மோசமாக அவர்கள் தங்கள் சொந்த மக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு வந்ததற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்றும் சாடினார்.

தேசிய அல்லது காபந்து அரசாங்கம் பற்றிய பேச்சுக்கள் இருக்கும் நிலையில் நெருக்கடிக்கு மக்களுக்கு உடனடி குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் அவசியம் என சுட்டிக்காட்டினார்.

இன்னல்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில் மட்டும் ஒண்றிணையாத இலங்கையை தான் தனிப்பட்ட முறையில் நம்ப விரும்புவதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இதுவே இனவாதம் மற்றும் மதவாதம் சமூகத்திலோ அல்லது அரசியலிலோ எந்தப் பங்கையும் வகிக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழலுக்கும், உறவினர்களுக்கு பதவிகளை வழங்குவது மற்றும் குடும்ப ஆட்சியை கொண்டு செல்வதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!