பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டல்
Prathees
3 years ago

அநுராதபுரத்தில் உயர்மட்டப் பிரமுகர்கள் ஜோதிடத்திற்கு அடிக்கடி செல்லும் ஞானக்கா என்ற பெண்ணின் வீட்டிற்கும் ஹோட்டலுக்கும் பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
அநுராதபுரத்தில் இடம்பெற்று வரும் அரச எதிர்ப்புப் போராட்டம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக இரண்டு தடவைகள்இ குறித்த பெண்ணின் வழிபாட்டுத்தலத்தையும் வீட்டையும் தாக்குவதற்கு மக்கள் முயற்சித்துள்ளனர்.
இதையொட்டி அந்த இடங்களில் பலத்த பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



