சிலாபத்தில் பதற்ற நிலை அரசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்த மக்கள்
Nila
3 years ago

சிலாபம் – அலாவத்த பகுதியில் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மக்கள் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த தலைமையிலான ஆர்ப்பாட்ட குழுவே இவ்வாறு பொது மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
இந்த நிலையில் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் மழை, வெயில் பாராது மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் சிலாபத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



