ஜனாதிபதிக்கும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக நாடாளுமன்ற சுயாதீன அணி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தமது ட்விட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பேச்சுவார்த்தையில், அடிப்படை சேவைகளை ஸ்திரப்படுத்தி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவும், நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், மக்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை தெரிவு செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டணியின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று மாலை 4 மணிக்கு எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது
இதன்போது 21வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கனேஷன் தெரிவித்தார்.



