பிரான்ஸ் தேர்தல் முடிவுகள் - முன்னிலையில் மக்ரோன்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் 27.6% வாக்குகளுடன் மக்ரோன் முதலிடம் பிடித்தார். பிரான்ஸ் டெலிவிஷன்களுக்கான Ipsos இன் ஆரம்ப கணிக்கப்பட்ட முடிவுகளின்படி இது தெரிய வந்துள்ளது.
அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முதல் சுற்றில் தான் பெற்ற பெறுபேறுகளை விட அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
தீவிர வலதுசாரிகளை தடுத்து நிறுத்தவும், சர்வதேச இராஜதந்திர அரங்கில் பிரான்சின் இடத்தை போருக்கு மத்தியில் பாதுகாக்கவும் பிரச்சாரத்தின் இறுதி மணிநேரங்களில் தெளிவாக ஆதரவை மக்களிடமிருந்து இவர் பெற்றார்.
ஆனால் லு பென்னின் மதிப்பெண்களும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகமாக இருந்தது.
மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய கவலையாக மாறிய வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் பணவீக்கம் குறித்து கடுமையாக பிரச்சாரம் செய்த பின்னர் அவர் தொடர்ந்து மக்கள் ஆதரவைப் பெற்றார்.



