எரிபொருள் புகையிரதத்துடன் மற்றுமொரு புகையிரதம் மோதி விபத்து! வீணாகிய பெருமளவான டீசல்

Mayoorikka
3 years ago
எரிபொருள் புகையிரதத்துடன் மற்றுமொரு புகையிரதம் மோதி விபத்து! வீணாகிய பெருமளவான டீசல்

ரம்புக்கனை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் போக்குவரத்து புகையிரதத்துடன் மற்றுமொரு புகையிரதம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று (11) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் புகையிரதம் ஒன்று சாரதியின்றி பிரேக் பழுதானதன் காரணமாக பயணித்து சென்று, புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் புகையிரதத்துடன் மோதியுள்ளது.

பின்னர், ரம்புக்கனை ரயில் நிலையத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீதும் எரிபொருள் புகையிரதம் மோதியுள்ளது.

இச்சம்பவத்தினால் எரிபொருள் ரயிலில் இருந்து பாரியளவான டீசல் வீணாகியுள்ளதாக  தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!