கொட்டும் மழைக்கு மத்தியிலும் மூன்றாவது நாளாக தொடர்கிறது போராட்டம்!

#SriLanka #Protest #Lanka4
Reha
3 years ago
கொட்டும் மழைக்கு மத்தியிலும் மூன்றாவது நாளாக தொடர்கிறது போராட்டம்!

காலி முகத்திடல் - அரச தலைவர் செயலகத்திற்கு முன்னால் நேற்றுமுன் தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று(11) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக் காரர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போதும் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளானவர்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.அங்கிருக்கும் போராட்டக்காரர்கள் ‘கோட்டா கோ ஹோம்’‘GoHomeGotta’ எனக் கோஷங்களை எழுப்பிவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்றைய தினத்தைப் போலவே இன்றும் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!