இராஜினாமா செய்த அமைச்சர்கள் உடனடியாக அரசாங்க சொத்தை கையளிக்குமாறு உத்தரவு

இராஜினாமா செய்த அனைத்து அமைச்சர்களுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனங்கள், வீடுகள், தளபாடங்கள் மற்றும் அனைத்து உபகரணங்களையும் உடனடியாக கையகப்படுத்துமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு திறைசேரி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 26 அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
திறைசேரி செயலாளர் எஸ். ஆர்.ஆட்டிகல இராஜினாமா செய்வதற்கு முன்னர் இந்த சுற்றறிக்கையில் கையெழுத்திட்டிருந்தார்.
சுற்றறிக்கையின் பிரகாரம், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அனைத்து மாகாண சபைகளின் செயலாளர்கள் மற்றும் அமைச்சுகளின் தலைவர்கள் மேற்கண்ட பணிப்புரைகளின் கீழ் செயற்பட வேண்டும்.
26 முன்னாள் கபினட் அமைச்சர்கள் இராஜினாமா செய்து ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது
அந்த அமைச்சர்களுக்கு சொந்தமான வாகனங்கள் உட்பட எந்த ஒரு அரசு சொத்தும் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் இல்லை.



